Sunday, October 7, 2012

பார்த்தாயோ குறுக்கெழுத்து - 1

குறுக்கெழுத்துக் குழு : பார்த்தசாரதி & யோசிப்பவர்.

 இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.

இந்த வலைத்தளக் குறுக்கெழுத்துப் புதிரில் நீங்கள் ஆங்கிலத் தட்டச்சுப் பலகை கொண்டே தட்டச்சு செய்து
விடைகளை நிரப்பலாம். உதாரணமாக “புதிர்” என்று தட்டச்சு செய்ய,"puthir" என்னும் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்.  ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் : http://www.tamilvu.org/library/dicIndex.htm
                                        அகரமுதலி.com
                                        http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/


பார்த்தாயோ - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.மாலையில்லா ஆரம்பம் அடக்கிய பொருத்தமான பரிசு. (5)
6.ராமர் உடைத்தது விட்டு விடவில்லையா? குறைந்த வயது வீரனா? (4)
7.கைப்பிடித்த அணங்கு அங்கு இல்லாததால் தலைகீழ்ப் பாய்ச்சல். (4)
8.பாரதத்தின் வெள்ளிவீரர் சுஷில்குமாரின் வலிமைப்போர். (6)
13.விழாது, தாண்டாது கொடுத்ததை தகரங்களின்றி சிறப்பு நிகழ்வுடன் பாராட்டு. (2,4)
14.முன்னாள் ஜனாதிபதி விலகி எல்லாம் கதறி சிதறி வீசுவது. (4)
15.கடையிழந்த திரு சேர வேண்டிய இடம். (4)
16.காளி குதுர மேல ஏறி வந்ததைச் சொன்னால் கேட்க இனிமையாக இருக்கும். (2,3)

நெடுக்காக:
1.நிலை குலையாமல் உலக நாயகன் விழா எடுத்துக் கலந்தான். (5)
2.விளையாட்டுப் பிள்ளை கண்ணனுக்கு மனம் காற்றாடியானதே. (2,3)
4.பத்தரை மாற்று முதலாவது. (4)
5.மல்லேஸ்வரி காது. (4)
9.என் மொழி பேசுபவனே! (3)
10.கருப்பஞ்சாற்றுக் கட்டியில் மெய்யிடை நீக்கி கண் திருப்பினால் மூன்றாமிடம். (5)
11.நடுவில் தங்கும் தொலந்து போன தோல் கருவி கண்டு உதறும். (5)
12.சிறிய ஆபத்து! கண்டம் விட்டோடினால் பிடுங்கு. (4)
13.அர்ஜுனன் எனும் தொழிலாளி! (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, October 6, 2012

குழு குறுக்கெழுத்துப் புதிர் - 5 விடைகள்

குழு குறுக்கெழுத்துப் புதிர் - (யோசித்து - 3:http://kurukkezuthu.blogspot.com/2012/09/3.html) விடைகள் 

 

குறுக்காக:

1.பெரிதில்லை அம்மா! கை நீட்டு, மலர் பார்! (5)  அம்+புஜம்=அம்புஜம்
4.ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே என்று பாடியது அப்பனைப் பற்றியதோ? (2) “தேம்படு பனையின்” என்று தொடங்கும் செய்யுள்:  பனை
5.குறைவு மெய்கொன்றால் அதிகம் (2)  கம்மி-ம் =மிக
6.நிலைக்க முடியா பொன் (3):  நிலைக்க  = முடியா பொன் =தங்கம்)= தங்க
8.சரம் சூழ்ந்தது சூழ்ந்த யாவும் நீங்கியது வட்டமில்லை! (4):  சரம் சூழ்ந்தது -சூழ்ந்த + வட்டமில்லை = சதுரம்
10.காகம் இடையினம் சேர்ந்த வனப் பிரதேசம் (4): காகம்+ ன=கானகம் (வனப் பிரதேசம்)
12.மாம்பழம் மூன்று தினுசு (3) மா+திரி = (தினுசு) மாதிரி
13.சங்கதியைக் கேள் வழி பிறக்கும் (2): கதி
14.பிரமன் தொழில் பாதியில் நின்று விட்டாலும் திரண்ட மக்கள் தொகுதி (2)படைப்பு-ப்பு = படை
15.சும்மா தலை போக குளம் குதித்து குதித்து விளையாடல் (5): சும்மா-சு+குளம்= கும்மாளம் (குதித்து விளையாடல்)

நெடுக்காக:
1.முழு அயலானை பத்து பயலா மறைப்பது? (4) அயலானை பத்து - பயலா = அனைத்து (=முழு)
2.சித்தார்த்தர் வழி காட்ட தம்பு செட்டித்தெருவில் சந்திப்பார் (4) சித்தார்த்தர் வழி = புத்தம் (தம்பு+த் (சந்தி))
3.பசு பிணைக்கும் முதலிரண்டு ஸ்வரங்கள்! (5):  ஆ+கட்டும் = சரி =ஆகட்டும்
7.ஆக கனகசபையில் ஆகாயம் பார்த்தீரோ?! (3):  ஆகாயம் = ககன
8.பாதி அரசரை தலைமறைவில் பார்க்க இனிக்கும் (5): பாதி அரசரை சரை; தலை மறைவில் பார்க்க = ர்க்க; இனிக்கும் = சர்க்கரை
9.சந்துரு தலையில் ரமா சுற்றுகிறாள் என்று வம்பு பேசுவதில் ஒரு ஸ்வாரசியமா? (3):  சந்துரு தலை = ச; ரமா சுற்றுகிறாள் ==>ரசமா (ஸ்வாரசியமா)
10.மாயக்காரி மெய் மறந்துக் குழம்பும் செயலா? (4):  மாயக்காரி மெய்ம் மறந்து = மாயகாரி’ குழம்பும்==> காரியமா (செயலா)
11.கொடியேற்றப் பயன் படும் ஊர் (4):  கொடியேற்றப் பயன் படும்= கம்பம் (ஊர்)

குறிப்புகள்:

பங்கு கொண்டவர்கள் எண்ணிக்கை: 8
(ராமையா, சாந்தி, ரமராவ், சந்தானம் குன்னத்தூர், பார்த்தஸாரதி, ஹரி பாலகிருஷ்ணன், மீனாக்‌ஷி சுப்ரமணியன், மனு)
அனைவருக்கும் நன்றி.
முழுதும் சரியாக விடையளித்தவர்கள்: 4 - பேர்
அதிகம் தவறவிடப்பட்டவை:  குறுக்காக 1, 4, 5; நெடுக்காக 1.

 

Tuesday, September 25, 2012

"யோசித்து” குறுக்கெழுத்துப் புதிர் - 3

யோசிப்பவர், முத்து இணைந்து உருவாக்கியது

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.

இந்த வலைத்தளக் குறுக்கெழுத்துப் புதிரில் நீங்கள் ஆங்கிலத் தட்டச்சுப் பலகை கொண்டே தட்டச்சு செய்து
விடைகளை நிரப்பலாம். உதாரணமாக “புதிர்” என்று தட்டச்சு செய்ய,"puthir" என்னும் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்.  ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.  செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் : http://www.tamilvu.org/library/dicIndex.htm
                                        அகரமுதலி.com
                                        http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

பதில்கள் நிலவர அட்டவணை (Score Card): http://tinyurl.com/yosiththu3ScoreCard
யோசித்து - 3 <!--Generated by PuthirMayam Crossword Builder Tue Sep 25 2012 09:16:05 GMT-0400 (Eastern Daylight Time)

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பெரிதில்லை அம்மா! கை நீட்டு, மலர் பார்! (5)
4.ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே என்று பாடியது அப்பனைப் பற்றியதோ? (2)
5.குறைவு மெய்கொன்றால் அதிகம் (2)
6.நிலைக்க முடியா பொன் (3)
8.சரம் சூழ்ந்தது சூழ்ந்த யாவும் நீங்கியது வட்டமில்லை! (4)
10.காகம் இடையினம் சேர்ந்த வனப் பிரதேசம் (4)
12.மாம்பழம் மூன்று தினுசு (3)
13.சங்கதியைக் கேள் வழி பிறக்கும் (2)
14.பிரமன் தொழில் பாதியில் நின்று விட்டாலும் திரண்ட மக்கள் தொகுதி (2)
15.சும்மா தலை போக குளம் குதித்து குதித்து விளையாடல் (5)

நெடுக்காக:
1.முழு அயலானை பத்து பயலா மறைப்பது? (4)
2.சித்தார்த்தர் வழி காட்ட தம்பு செட்டித்தெருவில் சந்திப்பார் (4)
3.பசு பிணைக்கும் முதலிரண்டு ஸ்வரங்கள்! (5)
7.ஆக கனகசபையில் ஆகாயம் பார்த்தீரோ?! (3)
8.பாதி அரசரை தலைமறைவில் பார்க்க இனிக்கும் (5)
9.சந்துரு தலையில் ரமா சுற்றுகிறாள் என்று வம்பு பேசுவதில் ஒரு ஸ்வாரசியமா? (3)
10.மாயக்காரி மெய் மறந்துக் குழம்பும் செயலா? (4)
11.கொடியேற்றப் பயன் படும் ஊர் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
-->

Thursday, August 9, 2012

குழு குறுக்கெழுத்துப் புதிர் - 4 விடைகள்

குறுக்காக:
3.  யானை வைத்து யானை வளைப்பது மனிதப் பண்பாடு (5):  நாகரிகம்  (நாகம், கரி = யானை)
6.  கதவு இடுக்கில் இருப்பது பூச்சுக்கு உதவும் (4)  (தகரம்)
7.  வழுவின்றி மகிழுபவன் மன்னன்(4)  (மகிபன்)
8.  மயன் கண்ட பணிவு பயன் இல்லாமல் சிரிக்க வைத்தவர் (6) (கவுண்டமணி)
13.  மழையை நம்பிய விளைச்சலாக கிராமத்தில் வருகிறாயா மானாக
    கலந்து? (6) (மானாவாரியாக)
14. அவனி ஓரங்களில் விசு திரும்பி நுழைந்த நட்சத்திரம் (4) (அசுவனி)
15. இனிப்புக் கவிதை நேரில் பார் (4) (பாசந்தி)
16. மலர் சந்தோஷப்பட பூவுலகம் அந்தாதி பாடும் (5) (மகிழம்பூ)

நெடுக்காக:
1.  பெண்டிர் விடுதி திங்கள் வகை (5) (மாதரகம்)
2.  மண்டியில் திரும்பி வர வாகனம். (2,3) (மரவண்டி)
4. மதிப்பிடுவதற்குள் மலையேறும் பட்டம் (4) (கலைமணி)
5.  கோல் கொடு. குளிர் போக்கும்! (4)  (கம்பளி)
9.  பாதி மதி தொடர சொப்பனம் கண்டது பிள்ளையா? (3) (மகனா)
10.  காசு பாதி சேர்த்த சீதனம் கிண்டல் (5) (பரிகாசம்)
11.  காதல் நூல் வகையில் கட்டு உள்ளே ஆயுதம் (5) (அகத்திணை)
12.  கொதித்தெழுந்து சுடுதலை விட்டுக் கருகி (4) (பொசுங்கி)
13.  வஞ்சனை விஞ்ஞானி கடைசியில் நுழைத்த அறக்கொடை (4) (மானியம்)

குறிப்புகள்:

பங்கு கொண்டவர்கள் எண்ணிக்கை: 7
முழுதும் சரியாக விடையளித்தவைர்கள்: 2 - பேர்

அதிகம் தவறவிடப்பட்டவை:  6 குறுக்காக, 1 நெடுக்காக (2 பேர்)

6 குறுக்காக - கேள்விகளும், விடையும்:

Ramachandran Vaidyanathan (ஜூலை 28)
தகரம்????
ஆங்கிலத்தில்  tin   என்பது  வெள்ளீயம்
தமிழில்  தகரம் என்னும் சொல் இரும்பு தகடுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது!!!

யோசிப்பவர்  (ஆகஸ்டு 9)
But still I dont understand how thagaram is connected with poochukku uthavum!?

விளக்கம்:

அகராதிகள் சொல்வது:
1.  http://dsal.uchicago.edu/cgi-
bin/romadict.pl?query=%E0%AE%


A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%

E0%AF%8D&table=fabricius
தகரம் (p. 470) [ takaram ] , s. tin; 2. lead, ஈயம், 3. a kind of fragrant drug; 4. fragrant unguent for the hair, மயிர்ச்சாந்து; 5. a fragrant tree, தகரமாம்; 6. the letter த.
தகரம் பூசு; to coat with tin.
2.  http://www.tamilvu.org/


library/dicIndex.htm
சொல்
அருஞ்சொற்பொருள்
தகரம் மயிற்சாந்து ; மணம்வீசும் மரவகை ; மணம் ; வெள்ளீயம் ; உலோகத்தகடு ; இதயத்தின் உள்ளிடம் .

Monday, July 30, 2012

விடைகள் - குழு குறுக்கெழுத்து - 3

குறுக்காக:

2. தீபகற்பம் => நேரம் கெட்டு விளக்கு வைக்கும் பகற் பொழுது, இங்கு மூன்று பக்கமும் நீர் சூழ்ந்தது. (6)
4. நாட்டாமை=> நடுவன் ஆட்சி கலையும் தேசமா? பாட்டி கொன்ற ஆமையா? தீர்ப்ப ஒழுங்கா சொல்லுங்க!! (4)
7. விடாதது => அரைகுறையாக இவ்வித துப்பட்டா ஒரம் கலைந்தது பிடித்து இருக்கிறது. (4)
8. அம்புலிமாமா=> திங்கள் பெரிய பெரிய குழந்தைகளுக்கு கதை சொல்லும். (6)
11. துர்கனவா => வானகர் துயிலில் திரும்பி வந்த இனிய சொப்பனமா? இல்லை! (5)
12. பள்ளிக்கு => படிக்கப் போவது, படுக்கப் போவது. (5)
14. விரக்தியால்=> கையறு நிலையால் பலி வாங்கிய விரலில் பக்தியா? (6)
17. கப்பம்=> கோள் சொல்லாமல், கம்பன் தப்பு செய்த வரி. (4)
18. வளரும்=> பெரும் வளம் தரும் மாதம் போனால், சிதறிப் பெருகும். (4)
19. கும்மிருட்டு=> சற்றும் வெளிச்சம் இல்லாத பொழுது குருட்டு மிருகம் தோலுரிந்தெடுத்து அலைந்தது. (6)

நெடுக்காக:
1. தோட்டம்=> தோழர் கூட்டம் சுற்றிப் பார்க்க வந்த பூங்கா. (4)
2. தீமை=> இரட்டை டம்ளர் முறை எதற்கு? வெளியே சொன்னால் கேடு. (2)
3. பட்டாக்கத்தி=> ஆயுதம் காட்டாத பக்கத்தில் காதல் இழந்ததால் தடுமாறுகிறது. (7)
5. மதுரவாயில்=> வாயில் சொல்லும் முன்னே தித்திக்கும் சென்னையில் உள்ளது. (6)
6. தேமா=> நேருக்கு நேர் திரும்பி வரும் பெண்ணே! (2)
8. அப்பக்கம்=> அங்கு அந்தத் தாளின் ஒரு முகம். (6)
9. புள்ளிவிபரம்=> எங்கெங்கே மச்சம் என்ற தகவல்? (7)
10. மாது=>பெண் வந்தாலே பெரும் துன்பம் தொடங்கிடும். (2)
13. குவி=> குறைந்த விலையில் தொடங்கினால் மட்டும் சேர். (2)
15. ரவை=> உள்ளே வரவைத்து சுட்டுத் தள்ளத் தேவை? (2)
16. யாவரும்=> எல்லோரும் எட்டிப் பார்க்கும்... சூர்யா வரும் நேரம். (4)
18. வடு=> பிஞ்சு வயதில் ஆரம்பித்த அசட்டு முடிவு. (2)

Saturday, July 21, 2012

விடைகள் - குழு குறுக்கெழுத்து - 2

யோசித்து-2 (http://kurukkezuthu.blogspot.com/2012/07/2.html) குழுகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள்:

குறுக்காக:

2.தனை இழந்த முனைப்பு, தரம் தருமே மூவுலகம். (5)  முப்புரம்
5.காலுடைந்த ராகம் ஒரு தினுசு. (3)  ரகம்
6.தேனுண்ணும் வண்மை உண்டு உண்மை இல்லை! (3)  வண்டு
7.உரையாட உடம்பே சவுக்கியத்தில் இருக்கும். (2)  பேச
8.பாதி முத்தம் கொடுத்த விதம் முடிக்காமல் திரும்பி கடைவாய்ப் பல்லு உடைந்து நடுவில் விழுந்தால் உடன் சிகிச்சை செய். (5)  முதலுதவி
10.விடிகாலை வந்து துவை. கறை இருப்பது தெரியும். (3)  வைகறை
11.நீராடியா காலுடைத்துக் குழம்பி வந்தாய் பெண்ணே உன் விவரம் என்ன? (4)  யாரடிநீ
14.அந்தப்பாவி அதிகம் கலங்கியது தணியா தாகமா? (4)  தவிப்பா
15.முகப்பு பருவம் வம்பு நீங்க பருவ வயதில் வரும். (5)  முகப்பரு
16.பம்பரம் இடையில் ஒரு ஸ்வரம் விட்டு சுற்றினால் அறுக்கும். (4)  ரம்பம்
17.எமது வைரம் எவை எடுத்தால் இனிமை. (4)  மதுரம்
19.பாவம் சுழன்றால் அக்கப்போரா? (3)  வம்பா
21.செல்வம் கால் செம்மதி முக்கால் உயர்ந்த மனிதன். (4)  செம்மல்
23.கால் படியைத் தொட கையிழந்த இருபத்தி நான்கு நிமிடம். (2)  நாழி
24.துணிவில் புலியாய் வந்தவள் துணிபு இழந்தாள் அம்பு எய்பவளாய்! (5)  வில்லியாய்
25.சிகை கட்ட முற்றுப்பெற. (3) முடிய
26.சிறு மிருகம்! காட்டு ராஜாவை வெல்லப் பிரயத்தினம் செய்! (3)  முயல்
27.அழகிது பாரும் கண்ணீர் விட மறுத்துக் கலங்கி மெலிந்து போனேன். (5)  துரும்பாகி

நெடுக்காக:
1.சபை நடுவே கொஞ்சம் ரசம் கொட்டினால் தர்பார் நடத்துவோம். (4)  அரசவை
2.மூன்று தடவை சகலமும் முறைத்துப் பார். (4)  மும்முறை
3.தவம் இல்லா புதல்வரும் நலம் கெட்ட நவிலலும் சேர்ந்து குழப்பி ஒரு பூண்டு. (5)  புல்லுருவி
4.முகம் காட்டும் மூக்கில் அணிவது. (4)  கண்ணாடி
9.தருமன், சகாதேவன் முதல்வரை எடுத்து வியாசபாரதம் செய் வணிகம் பண்ணு! (5,2)  வியாபாரம் செய்
12.நீச்சல் கரைகளுக்கிடையில் லாபம் குதித்து கரைந்த பூ. (5)  நீலாம்பல்
13.நகை, உடை வாங்க முதலில்லை; இடையே முக்கியத் தலைச் செலவு இருக்கு. கையில் காசில்லை! (3)  கைமுடை
14.பெரும் சங்கடம் சங்கடம் இல்லாததால் தலை காப்பது முடியவில்லை. (3) தரும
18.மிகச்சரியான துன்பம் எல்லைகள் மாற்றச் சொல்லியது. (5)  துல்லியம்
19. இடமில்லா நிலவறை நடுவே முழி திருப்பிப் பார்த்தால் புரியும் செயல் படுத்தும் விதம். (4)  வழிமுறை
20.பயன்படுத்தியது பெருங்குற்றம் செய்தவனுடையது. (4)  பாவியது
22.பிற்பகல் ஆசிரியர் இல்லாவிட்டால்,மதியார் வாத்தியம் வாசி. (4)  மதியம்

Friday, July 20, 2012

குழு குறுக்கெழுத்துப் புதிர் - 4

Friday, July 20, 2012

இணைந்து வழங்குவோர்: முத்து-பார்த்தா

 

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
                                        அகரமுதலி.com
                                        http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

SCORE BOARD :- http://tinyurl.com/JCP4Scorecard

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.  யானை வைத்து யானை வளைப்பது மனிதப் பண்பாடு (5)
6.  கதவு இடுக்கில் இருப்பது பூச்சுக்கு உதவும் (4)
7.  வழுவின்றி மகிழுபவன் மன்னன்(4)
8.  மயன் கண்ட பணிவு பயன் இல்லாமல் சிரிக்க வைத்தவர் (6) 
13.  மழையை நம்பிய விளைச்சலாக கிராமத்தில் வருகிறாயா மானாக
    கலந்து? (6)
14. அவனி ஓரங்களில் விசு திரும்பி நுழைந்த நட்சத்திரம் (4)
15. இனிப்புக் கவிதை நேரில் பார் (4)
16. மலர் சந்தோஷப்பட பூவுலகம் அந்தாதி பாடும் (5)


நெடுக்காக:
1.  பெண்டிர் விடுதி திங்கள் வகை (5)
2.  மண்டியில் திரும்பி வர வாகனம். (2,3)
4. மதிப்பிடுவதற்குள் மலையேறும் பட்டம் (4)
5.  கோல் கொடு. குளிர் போக்கும்! (4)
9.  பாதி மதி தொடர சொப்பனம் கண்டது பிள்ளையா? (3)
10.  காசு பாதி சேர்த்த சீதனம் கிண்டல் (5)
11.  காதல் நூல் வகையில் கட்டு உள்ளே ஆயுதம் (5)
12.  கொதித்தெழுந்து சுடுதலை விட்டுக் கருகி (4)
13.  வஞ்சனை விஞ்ஞானி கடைசியில் நுழைத்த அறக்கொடை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக


Monday, July 16, 2012

புதைபுதிர் குறுக்கெழுத்து

புதைபுதிர் குறுக்கெழுத்து
ஆசிரியர்: எஸ்பார்த்தசாரதி
குறுக்கெழுத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதை Quick அல்லது Easy crossword (எளிதான குறுக்கெழுத்து) என்று கூறுவார்கள்.  மற்றது, திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Crossword (புதைபுதிர் குறுக்கெழுத்து) என்று கூறுகிறார்கள். முதல் வகை நீச்சல் குளத்தில் நீந்துவது  என்றால் இரண்டாம் வகை கடலில் நீந்துவது. இரண்டு வகையிலுமே குறிப்பு மற்றும் அதன் விடையின் எழுத்துக்களின் எண்ணிக்கை கொடுக்கப் பட்டிருக்கும். நல்ல குறுக்கெழுத்துக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. குறுக்கெழுத்தின் கட்டங்களை 180  டிகிரி திருப்பினாலும் ஒரே மாதிரி இருக்கும் (symmetry).
தமிழ் பத்திரிகைகளிலும் செய்தித் தாள்களிலும் பெரும்பாலும் முதல் வகை மட்டுமே காண முடிகிறது அம்முறையில் பொது அறிவைச் சோதிக்கும் வண்ணம் புதிர்க் கேள்விகள் அமையும். உதாரணமாக, ` தேவ கலக நாயகர் (4) என்றால் அனேகமாக விடை நாரதர் என்றிருக்கும். இது நேரடி முறை. இதே விடை வரும் மறைபுதிர் குறிப்பு எப்படி இருக்கும்? கலக நாயகர் நார் தர கலைந்தார் (4) அல்லது ரங்கநாதர் குறைந்து கலந்ததில் கிடைத்த கலக நாயகர் (4). ஒரு தமிழ்ப்பத்திரிகை மட்டுமே மறைபுதிரான குறுக்கெழுத்துக்களை கடந்த 10 வருடங்களாக வெளியிடுகிறது. அது வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் மாத இதழ்.
ஆங்கில புதைபுதிர் குறுக்கெழுத்துகளுக்கு ஈடாக தமிழிலும் புதிர்கள் அமைக்க முடியும் என செய்து காட்டியவர், காட்டி வருபவர் என் குரு திரு வாஞ்சிநாதன். தென்றல் மாத இதழில் திரு வாஞ்சிநாதன் அமைக்கும் ‘தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்’ பகுதிக்கு நிறைய ரசிகர்கள் உண்டூ. பல ஆண்டுகளாக ஆங்கில குறுக்கெழுத்துக்களின் விடை கண்டுபிடித்து வரும்  நானும் என் மனைவி அம்ருதாவும் கலிஃபோர்னியாவில் ஜனவரி 2009ல் ‘தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்’ பார்த்தவுடன் அதன் தீவிர ரசிகர்களானோம். சென்னை வந்தபின் இணைய தளத்தில் பழைய தென்றல் இதழ்களைத் தேடி ஒவ்வொரு புதிரையும் அவிழ்த்து மகிழ்ந்தோம். பின்னர் திரு வாஞ்சிநாதனை சந்தித்தோம். அவர் அளித்த ஊக்கத்தால் ஏப்ரல் 2009 முதல் நாங்களும் புதிர்களை ஒவ்வொரு மாதமும் இணைய தளத்தில் அமைத்து வருகிறோம். யாம் பெற்ற இன்பம் எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மறைபுதிரான குறுக்கெழுத்துப் பற்றி விளக்கமாக இதை எழுதுகிறேன். இக்கட்டுரை படித்தபின் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிரான குறுக்கெழுத்துப் புதிர்களில் உங்களுக்கு ஆர்வம் வரும் என நம்புகிறேன்
எல்லா மறைபுதிரான குறுக்கெழுத்துக் குறிப்புகளிலுமே இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று அக்கு என்றால் இன்னொன்று ஆணி. ஒன்று விடையை நோக்கி கைகாட்டும். மற்றொரு பகுதியில் விடையை அறிவதற்கு வழிமுறைகள் சொல்லப் பட்டிருக்கும். உதாரணமாக கலக நாயகர் நார் தர கலைந்தார் (4) என்ற குறிப்பில் ‘கலக நாயகர்’ எனும் சொற்கள் விடையை நோக்கி கைகாட்டுகிறது. ‘நார் தர கலைந்தார்’ எனும் சொற்கள் விடை வரும் விதத்தை காட்டுகின்றன.
மறைபுதிரான குறுக்கெழுத்துக் குறிப்புகளில் பல உத்திகள் கையாளப் படுகின்றன. அவற்றில் சில இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
ANAGRAM (விடையின் சொற்களை வேறு வரிசைப் படுத்துதல்)
நாம் முதலில் காண்பது ANAGRAM. Anagram என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் இல்லாததால் ஏனக்ரம் என்றே அழைக்கலாம். ஒரு வகையில் இதுவும் சரியே. ஒரு சொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து உருவாக்கும் மற்றொரு சொல்லே Anagram ஆகும். அதாவது எழுத்துக்களை வேறு வரிசைப் படுத்த வேண்டும். வேறு வரிசை என்பதற்கு ஏன கிரமம் என்பது சரியானபடியால் ஏனக்ரம் எனும் புதிய வார்த்தையை ஏற்கலாம். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.
n  குளறுபடி மிகும் ஆட்டம் (3) விடை-கும்மி (மிகும் என்பதன் ஏனக்ரம்)
n  தீபாவளிக்கு வாங்குவது புடைத்து மாறுபடும் (4) விடை- புத்துடை (புடைத்து என்பதன் ஏனக்ரம்)
n  ஒழுங்குகெட்ட கந்தலை உதறிவிடு (4) விடை- கலைந்த (கந்தலை என்பதன் ஏனக்ரம்)
n  காரி பதம் படிக்க வடமொழிக்காவியம் (5) விடை- காதம்பரி (காரி பதம் என்பதன் ஏனக்ரம்)
n  ஒரு நூல் வாசம் கருதி மறுபதிப்பு (6)  விடை- திருவாசகம் (வாசம் கருதி என்பதன் ஏனக்ரம்)
n  மாருதி கத்த கலைந்து சரியாக (6) விடை- திருத்தமாக (மாருதி கத்த என்பதன் ஏனக்ரம்)

CHARADES (விடையின்  சொற்களுக்கு வேறு சொற்கள் உபயோகிப்பது)
ஆங்கில குறுக்கெழுத்துக் குறிப்புகளில் இவ்வகை குறிப்பகள் மிக அதிகம். இந்த வகை குறிப்புகளில் விடையை இரண்டு அல்லது மூன்றாக வெட்டி ஒவ்வொன்றுக்கும் ஒத்த கருத்துள்ள வேறு சொல்லை உபயோகிப்போம். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.
n  புத்திசாலிக்கு வெட்டக் கூடிய நிலவு (4) விடை- கூர்மதி (வெட்டக் கூடிய என்பதன் வேறு சொல் கூர், நிலவு என்பதன் வேறு சொல் மதி)
n  தொழிற்சாலை மேலே உலவும் இனிய கரம் (5) விடை- கரும்புகை (இனிய என்பதன் வேறு சொல் கரும்பு, கரம் என்பதன் வேறு சொல் கை)
n  அரசன் கோல் ராமர் வில் (5) விடை- கோதண்டம் (அரசன் என்பதன் வேறு சொல் கோ, கோல் என்பதன் வேறு சொல் தண்டம்)
n  புத்தகம் பார்த்து தைக்க உதவும் (2,3) விடை- நூல் கண்டு (புத்தகம் என்பதன் வேறு சொல் நூல், பார்த்து என்பதன் வேறு சொல் கண்டு)

தமிழில் சிலேடைப் பிரயோகம் கடி ஜோக்குகளில் அதிகமாக உபயோகிக்கப் படுகின்றன. ஒரு கடி ஜோக்கை குறுக்கெழுத்துக் குறிப்பாக மாற்றுவோமா?
என்னப்பா இது? கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னே! இப்பப் பாத்தா கல்லறைக்குக் கூட்டிட்டு வந்திருக்க?'
"நீங்கதானே ஐயா அடக்கமான பொண்ணா இருக்கணும்னு சொன்னீங்க?
இதற்கான குறுக்கெழுத்துக்  குறிப்பு - கல்லறையில் புதைத்தல் பெண்ணுக்கு நல்லது (5) விடை- அடக்கம்
சிலேடைப் புலி கி.வா.ஜகந்நாதன்  வேறு சில நண்பர்களுடன் காரில் போய்க் கொண்டிருந்தார். கார் வழியில் நின்று விட்டது. கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள். ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது. "என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?"
இந்த சம்பவத்தை குறுக்கெழுத்துக் குறிப்பாக் மாற்றுவோமா?
வண்டி நின்று போனால் உதவாத முதியவர் (6) விடை- தள்ளாதவர்
DOUBLE DEFINITIONS (சிலேடை- ஒரே விடை வரும் இரு பொருள் கொண்ட சொற்தொடர்கள்)
இந்த வகை குறிப்புகள் எளிதான குறுக்கெழுத்து மாதிரி. ஆனால் ஒரு குறிப்பிற்கு பதில் ஒரே அர்த்தம் கொண்டஇரண்டு சொற்தொடர்கள் இருக்கும். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும். விடைகளுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.
n  விளக்கிலிருக்கும் உண்மையை மாற்றிச் சொல் (2) விடை- திரி
n  துணி காய்க்கும் தாவரம்? (2) விடை- கொடி
n  அந்த ஆளைச் சமைக்க ஒரு காய் (3) விடை- அவரை
n  சிறிய தெருவை வியாபாரம் செய்யுமிடம் (3) விடை- சந்தை
n  தாயா? அந்தத் தூளா? (4) விடை- அம்மாவா
HIDDEN WORDS (விடை குறிப்பின் உள்ளேயே ஒளிந்திருக்கும்)
சிறு வயதில் விளையாடிய சொல் விளையாட்டு நினைவிற்கு வருகிறது. ‘ராமன் காட்டுக்குப் போனான்.’ இதில் இருக்கும் கிரிக்கெட் வீரர் யார்?  சொற்தொடரின் உள்ளேயே இருக்கும் அவர் பெயர் மன்காட். (50களில் வினு மன்காட், 70களில் அவர் மகன் அஷோக் மன்காட் இருவரும் இந்தியாவிற்கு ஆடியுள்ளனர்) குறுக்கெழுத்து உத்திகளிலேயே மிக எளிதானது இதுதான். சில குறிப்புகள் இதை தெளிவாக்கும். விடைகளுக்கு விளக்கம் தேவையில்லை.
n  அப்பா வைதாலும் ஒளிந்திருக்கும் மங்கை (2) விடை பாவை
n  கலிங்கர் வம்சத்தில் தலைக்கனம் (4) விடை கர்வம்
n  பக்காத்திருடன் அணைப்பில் கொஞ்சகாலம் பொறு (4) விடை காத்திரு
n  பூ வாசம் பங்கிட்டுக் கொண்டது (5) விடை சம்பங்கி
இதில் சிறிது கடினமான வகைக் குறிப்பும் உண்டு. உள்ளேயே இருந்தாலும் அடுத்தடுத்த எழுத்துகளாக இல்லாமல் அமைந்திருக்கும் குறிப்பு இதோ.
n  உறவு கொள்ளுதல் விட்டு விட்டு சாவார் காதலில் (4) ‘சாவார் காதலில்’ என்ற சொற்றொடரில் 1-வது, 3-வது, 5-வது, 7-வது, எழுத்துகளை சேர்த்தால் கிடைக்கும் விடை ‘சார்தல்’.

SPLIT WORDS (விடையின்  சொற்களுக்கு வேறு சொற்கள் ஒன்றுக்குள் ஒன்றாக உபயோகிப்பது)
நாம் முன்னரே பார்த்த Charades என்பதற்கும் இந்த Split words என்னும் உத்திக்கும் அதிக வேறுபாடு இல்லை. முன்னதில் விடையை இரண்டு அல்லது மூன்றாக வெட்டி ஒவ்வொன்றுக்கும் ஒத்த கருத்துள்ள வேறு சொல்லை உபயோகிப்போம். அவை வரிசையாக வரும். இந்த உத்தியில் அவை ஒன்றுக்குள் ஒன்றாக வரும். விளக்கத்துடன் சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.
n  சூரியன் ஸ்வரம் உள்ளே, கணவன் வெளியே (3) ஸ்வரம் அல்லது சுரம் என்பது ச,ரி,க,ம,ப,த,நி இவற்றில் ஒன்றைக் குறிக்கும். விடை- ப-ரி-தி (ஸ்வரம் என்பத ற்கு ரி, கணவன் என்பதன் வேறு சொல் பதி)
n  ஒரே வீட்டில் வாழ்வோர் ராசியில் கடைசி வீடு (5) கடைசி வீடு என்பது டு, ராசி என்பது எந்த ராசியின் பெயராகவும் இருக்கலாம். ஆனால் இங்கு பொருந்துவது கும்பம் மட்டுமே. விடை- கு-டு-ம்பம்
n  ரச நுழைவால் மகனுக்குப் பிறந்தவன் திறை வாங்குவான் (5) மகனுக்குப் பிறந்தவன் பேரன். ரச நுழைவால் என்றிருப்பதால் பேரன் உள்ளே ரச சேர்த்து பேர-ரச-ன். என்ற விடை கிடைக்கும்
n  எண்ணெய்க்காரன் உபகரணத்தில் வால் திரும்பி நுழைத்தால் ஊரில் மரியாதை (5) எண்ணெய்க்காரன் உபகரணம் செக்கு. அதன் உள்ளே ல்வா (வால் திரும்பி) சேர்த்து செ-ல்வா-க்கு. என்ற விடை கிடைக்கும்

DELETIONS (விடையின்  சொற்களின் எழுத்து(கள்) நீக்குவது)
இது வரை பார்த்த எல்லா வகைக் குறிப்புகளிலுமே இந்த உத்தி பயன்படும். விளக்கத்துடன் சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.
n  தில்லைக்கடவுள் மன்னரல்ல செல் (2) தில்லைக்கடவுள் நடராஜர். மன்னரல்ல என்றிருப்பதால் ராஜர் நீக்கியபின் கிடைக்கும் விடை நட.
n  முடிவு தெரியா குற்றமற்றவர் தந்தை (3) குற்றமற்றவர் அப்பாவி. முடிவு தெரியா என்றிருப்பதால் கடைசி எழுத்து நீக்கியபின் கிடைக்கும் விடைஅப்பா.
n  அடங்கா மக்கு அங்கா போயிற்று, வளை (4) அடங்கா மக்கு என்னும் சொற்றொடரில் ‘அங்கா’ நீக்கியபின் கிடைக்கும் விடைமடக்கு.
n  தலை நடுவே காலி அணை (2) தலை என்பதன் வேறு சொல் மண்டை. நடுவே காலி என்றிருப்பதால் நடு எழுத்து நீக்கியபின் கிடைக்கும் விடை மடை.
STRAIGHT CLUES (நேரடிக் குறிப்புகள்)
புதிரான குறுக்கெழுத்துக்களின் வழி ரஜினி மாதிரி தனி வழி. நேரடிக் குறிப்புகளிலும் ஒரு பஞ்ச் இருக்கும். அல்லது  பழமொழிகள், கவி அல்லது எழுத்தாளரின் வரிகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கும். விளக்கத்துடன் சில குறிப்புகள் இதை தெளிவாக்கும்.
n  மூட்டையாய்க் கட்டப்படும் பொய் (3) - பொய் என்பதை புளுகு முட்டை என்று சொல்வதனால் கிடைக்கும்  விடை புளுகு
n  சாவி இல்லாத கிறித்தவர்க்குப் போதிக்கப்படுவது? (6) - கிறித்தவ மதத்தில் கூறப்படும் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற சொற்றொடரிலிருந்து கிடைக்கும் விடை தட்டுங்கள்
n  ராமேசுவரத்திற்கு முன் வரும் புனிதத் தலம்?(2) - புனிதத் தலம் என்று சொல்லும்போது காசி, ராமேஸ்வரம் சேர்த்து சொல்வதால் கிடைக்கும் விடை காசி
n  முண்டாசுக் கவியின் ஜாதிப் பறவைகளில் முதலாவது (3)  - முண்டாசுக் கவி என்பது பாரதியாரைக் குறிக்கும். அவர் பாடல் ஒன்றில் 'எங்கள் ஜாதி' என இரு பறவைகள் குறிப்பிடப் பட்டுள்ளன.  அவற்றுள் முதலாவது. காக்கை எனபதால் விடை காக்கை
சூரியன் மேற்கில் மறைகிறான். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை. இதை குறுக்கெழுத்துப் புதிர் குறிப்பாக எப்படிக் கொடுத்தால் மூளைக்கு வேலை கிடைக்கும் என்பதற்கு என் குரு திரு வாஞ்சிநாதன் அவர்கள் உருவாக்கிய குறிப்பு ரவி அந்தப் பக்கம் காணாமல் போனான் (3) விடை மேற்கு
COMBINATIONS (வெவ்வேறு உத்திகள் இணைந்த குறிப்புகள்)
விருந்திற்கு எல்லா சுவைகளும் தேவை. அதுபோல் நல்ல குறுக்கெழுத்துக்களை சுவாரசியமாக ஆக்குவதே வெவ்வேறு உத்திகள் கலப்பதுதான். விளக்கத்துடன் சில உதாரணங்களைப் பார்ப்போமா?
n  குபேரா, வந்தனம் தலைகளில்லாமல் அளவற்ற மகிழ்ச்சி அடைவாய் (6) குபேரா, வந்தனம் இந்த இரண்டு சொறகளின் முதலெழுத்துக்களை நீக்கியபின் மிஞ்சிய எழுத்துக்களை வேறு வரிசைப் படுத்தினால் (ஏனக்ரம்) கிடைக்கும் விடை பேரானந்தம்
n  புள்ளிகளை இணைப்பது பங்கம் சேரக் கொடுஞ்சினம் (6) புள்ளிகளை இணைப்பது கோடு. இந்த சொல்லுடன் பங்கம் சேர்த்து வேறு வரிசைப் படுத்தினால் (ஏனக்ரம்) கிடைக்கும் விடை கடுங்கோபம்
n நெருப்பு வாங்குதலை ஒழித்தால் கெடுதல் (3) நெருப்புக்கு வேறு சொல் தீ. ‘வாங்குதலை ஒழித்தால்’ என்பதன் அர்த்தம் ‘வாங்கு என்ற சொல்லின் முதலெழுத்தை நீக்கினால்’. இதில் கிடைப்பது 'ங்கு'. சேர்த்தால் கிடைக்கும் விடை தீங்கு
n மனைவி இடையொடியச் சேர்த்த அரேபியப் பணம் மொட்டாகவே இருக்கும் நிலை (5) ‘மனைவி இடையொடிய’ என்பதன் அர்த்தம் ‘மனைவி என்ற சொல்லின் இடையெழுத்து (நடு எழுத்து) நீக்க வேண்டும்’. இதில் கிடைப்பது ' மவி '. இதனுடன் அரேபியப் பணமான ரியால் சேர்த்து கலந்தால் கிடைக்கும் விடை - விரியாமல்
முதல் குறுக்கெழுத்துப் புதிர் பார்க்குமுன் குறுக்கெழுத்து அமைப்பாளர்கள் செய்யும் சில வார்த்தை ஜாலங்களைப் பார்ப்போமா?
-     தலையிழந்து என்றால் முதலெழுத்தை நீக்க வேண்டும். அதே போல் இடையிழந்து என்றால் நடு எழுத்தை நீக்க வேண்டும். கடையிழந்து என்றால் கடைசி எழுத்தை நீக்க வேண்டும்.
-     குறைந்து என்றிருந்தால் அந்த வார்த்தையிலோ அதன் மாற்றுச் சொல்லிலோ எழுத்தை நீக்க வேண்டும்.
-     ஆதி என்பது முதலெழுத்தையும், அந்தம் என்பது கடைசி எழுத்தையும் குறிக்கும். அந்தாதி என்பது கடைசி, முதல் இரணடெழுத்துக்களையுமே குறிக்கும்.( உதாரணம்: ருக்கு அந்தாதி பாடும் ஆசிரியர் (2). விடை -   குரு)
-     உயிர் என்பது அ, ஆ, இ... என்னும் 12 உயிரெழுத்துக்களில் ஒன்றைக் குறிக்கும். அதுபோல் மெய் என்பது க்,ங்,ச் என்னும் 18 மெய்யெழுத்துக்களில் ஒன்றைக்  குறிக்கும்.
-     வள்ளல் என்பது 12 வள்ளல்களின் பெயர்களில் ஒன்றைக்  குறிக்கும். ராசி, மாதம், நட்சத்திரம்,  கிரகம், கண்டம், ஸ்வரம், காய், பழம் - இந்த பெயர்களில் ஏதாவது குறிப்பில் இருக்கலாம்.
-     பழமொழிகள் (உதாரணம்: பத்தும் செய்யும் செல்வம்(3). விடை - பணம்), இரட்டைக்கிளவி (உதாரணம்: லட்சுமி இரண்டாகத் தெரியாமல் முழிக்கும் விதம் (4) விடை - திருதிரு), வழக்கத்திலிருக்கும் சொற்-தொடர்கள் இவையெல்லாமே குறுக்கெழுத்து அமைப்பாளர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள். பலரும் அறிந்த ஒரு திருக்குறள் ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’. இக்குறளை குறுககெழுத்துக் குறிப்பாக மாற்றினால் வருவது -  உயிருடன் இருக்கும்போது முடிதுறக்க விரும்பாதது (5). விடை கவரிமான்.
*************