Sunday, July 15, 2012

குழு குறுக்கெழுத்துப் புதிர் - 3

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் : http://www.tamilvu.org/library/dicIndex.htm
                                        அகரமுதலி.com
                                        http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

SCORE BOARD :- https://docs.google.com/spreadsheet/ccc?key=0Ar2P_1bHQf2UdDB1bGdVUkcxclRDUF82SEg2OFBFc1E  

குழு குறுக்கெழுத்து 3
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
2.நேரம் கெட்டு விளக்கு வைக்கும் பகற் பொழுது, இங்கு மூன்று பக்கமும் நீர் சூழ்ந்தது. (6)
4.நடுவன் ஆட்சி கலையும் தேசமா? பாட்டி கொன்ற ஆமையா? தீர்ப்ப ஒழுங்கா சொல்லுங்க!! (4)
7.அரைகுறையாக இவ்வித துப்பட்டா ஒரம் கலைந்தது பிடித்து இருக்கிறது. (4)
8.திங்கள் பெரிய பெரிய குழந்தைகளுக்கு கதை சொல்லும். (6)
11.வானகர் துயிலில் திரும்பி வந்த இனிய சொப்பனமா? இல்லை! (5)
12.படிக்கப் போவது, படுக்கப் போவது. (5)
14.கையறு நிலையால் பலி வாங்கிய விரலில் பக்தியா? (6)
17.கோள் சொல்லாமல், கம்பன் தப்பு செய்த வரி. (4)
18.பெரும் வளம் தரும் மாதம் போனால், சிதறிப் பெருகும். (4)
19.சற்றும் வெளிச்சம் இல்லாத பொழுது குருட்டு மிருகம் தோலுரிந்தெடுத்து அலைந்தது. (6)

நெடுக்காக:
1.தோழர் கூட்டம் சுற்றிப் பார்க்க வந்த பூங்கா. (4)
2.இரட்டை டம்ளர் முறை எதற்கு? வெளியே சொன்னால் கேடு. (2)
3.ஆயுதம் காட்டாத பக்கத்தில் காதல் இழந்ததால் தடுமாறுகிறது. (7)
5.வாயில் சொல்லும் முன்னே தித்திக்கும் சென்னையில் உள்ளது. (6)
6.நேருக்கு நேர் திரும்பி வரும் பெண்ணே! (2)
8.அங்கு அந்தத் தாளின் ஒரு முகம். (6)
9.எங்கெங்கே மச்சம் என்ற தகவல்? (7)
10.பெண் வந்தாலே பெரும் துன்பம் தொடங்கிடும். (2)
13.குறைந்த விலையில் தொடங்கினால் மட்டும் சேர். (2)
15.உள்ளே வரவைத்து சுட்டுத் தள்ளத் தேவை? (2)
16.எல்லோரும் எட்டிப் பார்க்கும்... சூர்யா வரும் நேரம். (4)
18.பிஞ்சு வயதில் ஆரம்பித்த அசட்டு முடிவு. (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக