Saturday, July 21, 2012

விடைகள் - குழு குறுக்கெழுத்து - 2

யோசித்து-2 (http://kurukkezuthu.blogspot.com/2012/07/2.html) குழுகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள்:

குறுக்காக:

2.தனை இழந்த முனைப்பு, தரம் தருமே மூவுலகம். (5)  முப்புரம்
5.காலுடைந்த ராகம் ஒரு தினுசு. (3)  ரகம்
6.தேனுண்ணும் வண்மை உண்டு உண்மை இல்லை! (3)  வண்டு
7.உரையாட உடம்பே சவுக்கியத்தில் இருக்கும். (2)  பேச
8.பாதி முத்தம் கொடுத்த விதம் முடிக்காமல் திரும்பி கடைவாய்ப் பல்லு உடைந்து நடுவில் விழுந்தால் உடன் சிகிச்சை செய். (5)  முதலுதவி
10.விடிகாலை வந்து துவை. கறை இருப்பது தெரியும். (3)  வைகறை
11.நீராடியா காலுடைத்துக் குழம்பி வந்தாய் பெண்ணே உன் விவரம் என்ன? (4)  யாரடிநீ
14.அந்தப்பாவி அதிகம் கலங்கியது தணியா தாகமா? (4)  தவிப்பா
15.முகப்பு பருவம் வம்பு நீங்க பருவ வயதில் வரும். (5)  முகப்பரு
16.பம்பரம் இடையில் ஒரு ஸ்வரம் விட்டு சுற்றினால் அறுக்கும். (4)  ரம்பம்
17.எமது வைரம் எவை எடுத்தால் இனிமை. (4)  மதுரம்
19.பாவம் சுழன்றால் அக்கப்போரா? (3)  வம்பா
21.செல்வம் கால் செம்மதி முக்கால் உயர்ந்த மனிதன். (4)  செம்மல்
23.கால் படியைத் தொட கையிழந்த இருபத்தி நான்கு நிமிடம். (2)  நாழி
24.துணிவில் புலியாய் வந்தவள் துணிபு இழந்தாள் அம்பு எய்பவளாய்! (5)  வில்லியாய்
25.சிகை கட்ட முற்றுப்பெற. (3) முடிய
26.சிறு மிருகம்! காட்டு ராஜாவை வெல்லப் பிரயத்தினம் செய்! (3)  முயல்
27.அழகிது பாரும் கண்ணீர் விட மறுத்துக் கலங்கி மெலிந்து போனேன். (5)  துரும்பாகி

நெடுக்காக:
1.சபை நடுவே கொஞ்சம் ரசம் கொட்டினால் தர்பார் நடத்துவோம். (4)  அரசவை
2.மூன்று தடவை சகலமும் முறைத்துப் பார். (4)  மும்முறை
3.தவம் இல்லா புதல்வரும் நலம் கெட்ட நவிலலும் சேர்ந்து குழப்பி ஒரு பூண்டு. (5)  புல்லுருவி
4.முகம் காட்டும் மூக்கில் அணிவது. (4)  கண்ணாடி
9.தருமன், சகாதேவன் முதல்வரை எடுத்து வியாசபாரதம் செய் வணிகம் பண்ணு! (5,2)  வியாபாரம் செய்
12.நீச்சல் கரைகளுக்கிடையில் லாபம் குதித்து கரைந்த பூ. (5)  நீலாம்பல்
13.நகை, உடை வாங்க முதலில்லை; இடையே முக்கியத் தலைச் செலவு இருக்கு. கையில் காசில்லை! (3)  கைமுடை
14.பெரும் சங்கடம் சங்கடம் இல்லாததால் தலை காப்பது முடியவில்லை. (3) தரும
18.மிகச்சரியான துன்பம் எல்லைகள் மாற்றச் சொல்லியது. (5)  துல்லியம்
19. இடமில்லா நிலவறை நடுவே முழி திருப்பிப் பார்த்தால் புரியும் செயல் படுத்தும் விதம். (4)  வழிமுறை
20.பயன்படுத்தியது பெருங்குற்றம் செய்தவனுடையது. (4)  பாவியது
22.பிற்பகல் ஆசிரியர் இல்லாவிட்டால்,மதியார் வாத்தியம் வாசி. (4)  மதியம்